உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 13,320 வழக்குத் தாக்கல்

(UTV | கொழும்பு) – மோட்டார் சைக்கிள்களின் ஊடாக இடம்பெறுகின்ற விபத்தை குறைப்பதற்காக, கடந்த 72 மணி நேரத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத 450 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ​பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், போக்குவரத்து சட்டத்திட்டங்களை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 13,320 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

மதுபோதையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்திய 398 பேரும், கடும் வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 129 பேரும், தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள் செலுத்திய அல்லது பின்னால் இருந்து பயணித்த 1977 பேரும், கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பில்,1303 பேருக்கும், வீதி போக்குவரத்துச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ், 2806 பேரும், ஏனைய குற்றங்களின் கீழ் 6186 பேருக்கு எதிராகவும் குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கெஹலிய தாக்கல் செய்த ரிட் மனு : மே 07 ஆம் திகதி வரை ஒத்திப்பு

இந்திய உயர் ஸ்தானிகர் – பிரதமர் இடையே சந்திப்பு

மே மாதம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்