உலகம்

இந்தியா – சவூதி முறுகல் நிலையில் உக்கிரம்?

(UTV |  இந்தியா) – கச்சா எண்ணெய் விலை தொடர்பாக இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான உறவில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் மனக்கசப்பு இப்போதும் குறையாதது போலவே தோன்றுகிறது.

அண்மையில், இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சவூதி அரேபியாவின் எண்ணெய் அமைச்சர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் அல் சவுத் தெரிவித்த கூற்றுக்கு ஆட்சேபம் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என்று இந்தியா விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்த சவூதி அமைச்சர், கடந்த ஆண்டு எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு மத்தியில் இந்தியா வாங்கிக் குவித்த எண்ணெய் இருப்பை பயன்படுத்துமாறு கூறினார்.

இது ராஜீய அடிப்படை ரீதியில் சரியானதல்ல என்று சவூதி அரேபிய எண்ணெய் அமைச்சரின் அறிக்கை குறித்து தர்மேந்திர பிரதான் கருத்து தெரிவித்தார். “அத்தகைய அணுகுமுறையை நான் ஏற்கவில்லை. நிச்சயமாக கையிருப்பில் உள்ள எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு இந்தியாவுக்கு அதன் சொந்த திட்டமிடல் உள்ளது. நாட்டின் நலன்களை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

 

Related posts

“சிறிய நாடுகள் காணாமல் போகும் மந்தநிலை உருவாகிறது”

உலகளவில் அதிகரிக்கும் கொரோனா பதிப்பு

காஸா போரால்: ஏசுநாதர் அவதரித்த பெத்லகேம் (Bethlehem) நகரில் கிற்மஸ் கொண்டாட்டங்கள் இல்லை