விளையாட்டு

உலகை வென்று இன்று பத்து ஆண்டுகள்

(UTV |  மும்பை) – இந்திய அணி உலக கோப்பை வென்று இன்று பத்து ஆண்டுகள் ஆகிறது.

இந்தியாவில் 2011ல் உலக கோப்பை (50 ஓவர்) தொடர் நடந்தது. தோனி தலைமையில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. ஏப். 2ல் நடந்த பைனலில் இலங்கையை சந்தித்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 274/6 ஓட்டங்களை எடுத்தது.

அடுத்து ‘சேஸ்’ செய்த இந்திய அணிக்கு சேவக் (0), சச்சின் (18) கைவிட்ட நிலையில் காம்பிர் (97), கைகொடுத்தார். கடைசி நேரத்தில் சிக்சர் அடித்து அசத்திய தோனி, 28 ஆண்டுக்குப் பின் இந்திய அணியின் உலக கோப்பை கனவை நனவாக்கினார். இந்தியா (277/4) 6 விக்கெட்டில் வென்று இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.

இந்திய அணி கோப்பை வென்று இன்றுடன் பத்தாண்டு ஆகிறது. இதுகுறித்து தோனி இதுவரை ஒருமுறை கூட பேட்டி எதுவும் கொடுத்தது இல்லை. முதன் முறையாக தனியார் நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். இதில் கிரிக்கெட், பைக் ஆர்வம் என பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Related posts

இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

இலங்கை அணி குறுகிய காலத்திற்குள் சரியான இலக்கை அடையும்

கொரோனா வலையில் மொயீன்