விளையாட்டு

இலங்கைக்கான வெற்றி இலக்கு

(UTV | கொழும்பு) –  இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நிறைவின் போது விக்கட் இழப்பின்றி 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்திருந்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் சகல விக்கெட்களை இழந்து 354 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்ப்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுக்களுக்கு 280 ஒட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அவ்வணி சார்பாக Kraigg Brathwaite அதிகபட்சமாக 85 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதன்படி, இலங்கை அணிக்கு 377 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் தனது இரண்டாவது இன்னிங்சிற்காக இலங்கை அணி 29 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது..

இந்நிலையில், போட்டியின் இறுதி நாளான இன்று வெற்றிப் பெற இலங்கை அணிக்கு மேலும் 348 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

Related posts

பார்வையற்றோர் கிரிக்கெட் அமைப்பை அங்கீகரிக்கக் கோரி பி.சி.சி.ஐ.க்கு சச்சின் கடிதம்

பஞ்சாப் வீழ, மும்பைக்கு வெற்றி

தேசிய மெய்வல்லுனர் போட்டி; பாசில் உடையாருக்கு பதக்கம்