உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

கத்தோலிக்க தோவாலயங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக அவதானம் செலுத்தப்படும் என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பு நிலைமை குறித்து பகுப்பாய்வு செய்யுமாறு இராணுவத் தலைமையகம் அந்தப்பகுதிக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், பொலிஸார் மேற்கொள்ளும் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு அந்தப் பகுதிக்கு பொறுப்பான இராணு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அடையாளம் காணப்பட்ட சிறப்புப் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கவும் இராணுவத் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

மக்களுக்காக எத்தகைய முடிவையும் எடுக்கத் தயார் – ஜனாதிபதி ரணில்

editor

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

மக்கள் அலட்சியமாக இருந்தால் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறையாகும்