உள்நாடு

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட வேண்டும்

(UTV | கொழும்பு) – 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கு பலமான பாராளுமன்றமொன்று அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வாரியபொல பிரதேசத்தில் நேற்று(21) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் மூலமான அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு இல்லாவிட்டால் ஜனாதிபதியால் சுதந்திரமாக பணியாற்ற முடியாது போகும் என பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், தமது கட்சியின் சார்பாக நாட்டு மக்கள் குறித்து தெளிவான சிந்தனை கொண்டவர்களே தேர்தலில் முன்னிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல் எனவும், முழு உலகமும் இந்த தேர்தல் குறித்து தமது அவதானத்தை செலுத்தியுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பு நிச்சயமாக மாற்றப்பட வேண்டும் எனவும், தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காகவே 19ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அத்துடன், 19ஆவது திருத்தத்தை உருவாக்கியவர்களும், அதற்கு உதவி புரிந்தவர்களும் தற்போது அந்த திருத்தம் நீக்கப்பட வேண்டும் என கோரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகவே, அரசியலமைப்பை மாற்ற தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுப்பது பொதுமக்களின் பொறுப்பாகும் எனவுதம் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹரின், மனுஷவுக்கு SJB இனால் ஒழுக்காற்று நடவடிக்கை

விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் விசேட உரை

மினுவாங்கொடை தொழிற்சாலையில் இதுவரையில் 832 பேருக்கு கொரோனா