வணிகம்

எமிரேட்ஸ் இலங்கையுடன் கைகோர்த்து 35 ஆண்டுகள்

(UTV | கொழும்பு) –  எமிரேட்ஸ் நிறுவனம் இலங்கையை உலகுடன் இணைத்த 35 ஆண்டுகால பூர்த்தியைக் கொண்டுகின்றது. 1986 ஆம் ஆண்டில் அதன் முதல் விமானத்திலிருந்து, இந்த விமானம் கொழும்புக்கும், கொழும்பில் இருந்தும் 8 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளதுடன் – 49,000 க்கும் மேற்பட்ட ரவுண்ட்ரிப் விமானங்களை இயக்குகிறது.

எமிரேட்ஸ் தற்போது ஆறு வாராந்த விமானங்களுடன் இந் நாட்டிற்கு சேவையாற்றி வருவதுடன், வாடிக்கையாளர்களை தனது வலையமைப்புக்குள் 90 க்கும் மேற்பட்ட பயண இலக்குகளுடன் டுபாய் வழியாக இணைக்கிறது. எமிரேட்ஸ் 1986 ஏப்ரல் 1 ஆம் திகதி, Boeing 777-200LR இனைப் பயன்படுத்தி கொழும்புக்கான தனது செயற்பாடுகளைத் தொடங்கியது. 1997 ஆம் ஆண்டில், பயணிகளின் தேவை அதிகரித்ததால், விமான நிறுவனம் அதன் செயற்பாடுகளை மேம்படுத்தி அதன் பரந்த உடலை கொண்ட Boeing 777-300ER விமானத்தை மூன்று வகுப்பு கட்டமைப்புகளில் அறிமுகப்படுத்தியது. இன்று, தனது முதல் வகுப்பு சேவைகளுடன் கொழும்புக்கு சேவையை வழங்கும் ஒரேயொரு சர்வதேச விமான நிறுவனம் எமிரேட்ஸ் ஆகும். இது பயணிகளுக்கு சிறந்த சேவைகளையும் விமானத்திலும் தரையிலும் சௌகரியத்தையும் வழங்குகின்றது.

விமானத்தின் சரக்குப் பிரிவான எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ முக்கிய வர்த்தக இணைப்புகளை பராமரிப்பதிலும், பொருளாதார நடவடிக்கைகளை இயக்குவதிலும் தொடர்ந்து ஒரு முக்கிய பங்கை வகிப்பதுடன், உள்நாட்டு வணிகங்கள் உலகளவில் 130 க்கும் மேற்பட்ட கார்கோ பயண இலக்குகளை போய் சேர்வதற்கு உதவுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில், எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ கடல் உணவு, பழங்கள், காய்கறிகள், மருந்துகள், நுகர்வோர் மின்னணு உபகரணங்கள். மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்ற முக்கிய பொருட்கள் உட்பட 275,000 டன்களுக்கும் அதிகமானவற்றை நாட்டிலிருந்து எடுத்துச் சென்றுள்ளதுடன், நாட்டிற்கும் கொண்டு வந்துள்ளது.

எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைடுபாயின் விருது பெற்ற லோயல்டி திட்டமான எமிரேட்ஸ் ஸ்கைவர்ட்ஸில் 140,500 க்கும் மேற்பட்ட இலங்கை நாட்டவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது விமான நிறுவனத்தால் ஆதரிக்கப்படும் பங்குதாரர் விமான நிறுவனங்கள், ஹோட்டல் தங்குமிடங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வாழ்க்கை முறை அனுபவ மையங்களில் பிரத்தியேக நன்மைகளையும் வெகுமதிகளையும் மீட்டுக்கொள்ள உறுப்பினர்களை அனுமதிக்கிறது.

இந்த லோயல்டி திட்டம் 2022 ஆம் ஆண்டு வரை அதன் உறுப்பினர்களுக்கு அடுக்கு நிலை குறித்த நீட்டிப்பை வழங்கிய உலகின் முதல் திட்டங்களில் ஒன்றாகும். இது தொற்றுநோய் காலப் பகுதி முழுவதும் உறுப்பினர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மை, தெரிவு மற்றும் உறுதியளிப்பை வழங்குகிறது.

எமிரேட்ஸ் ஆறு கண்டங்களில் தடத்தைக் கொண்ட உலகளாவிய மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றாகும். வாடிக்கையாளர் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் விமான நிறுவனம் விரிவான நடவடிக்கைகளை அமுல்படுத்தியுள்ளமையால் இலங்கை வாடிக்கையாளர்கள் எமிரேட்ஸில் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் பயணிக்க முடியுமென்பதுடன், அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் தாராள மீள் முன்பதிவு மற்றும் விதிமுறைகளை வழங்குவதற்காக இலவச மல்டி-ரிஸ்க் பயணக் காப்புறுதி அறிமுகப்படுத்தியதுடன், முன் பதிவு கொள்கைகளை மாற்றியமைத்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு விஜயம் செய்யுங்கள் : emirates.com.

Related posts

ப்றீமாவும் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது

மரக்கறி விலையைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

தேசிய இனிப்புத்தோடை செய்கையை விஸ்தரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை