வணிகம்

CLOVER IN THALAWATHUGODA சொகுசு மனைத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்த PRIME SIGNATURE VILLAS

(UTV | கொழும்பு) –  இலங்கை ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் Prime Group, தனது பிரத்தியேக signature villas வரிசையில் புதிய இணைப்பாக ‘Clover in Thalawathugoda’ மனைத்தொகுதியை அங்குரார்ப்பணம் செய்துள்ளது. இந்த சொகுசு மனைகளானது, மார்ச் 19 ஆம் திகதியன்று Corea கார்டனில் திறக்கப்பட்டு, பதிவுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 60 சதவீத மனைகள் உடனடியாக விற்பனையாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஏற்கனவே வாடிக்கையாளர்களாக உள்ள பலர் மற்றும் கொள்வனவு செய்வதில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களும் இந்த புதிய சொகுசு மனைகளின் பிரத்தியேக மேன்மையை அனுபவித்து மகிழும் பொருட்டு வருகை தந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய Prime Group துணைத் தலைவர் திருமதி. சந்தமினி பெரேரா குறிப்பிடுகையில், Prime Group எப்போதும் சிறந்த இடச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. Clover என்பது மேலுமொரு வீட்டுத் திட்டமல்ல, இது நவீன கட்டடக்கலை மொழியுடன் கூடிய ஒரு முயற்சியாகும். இதன் உட்புற மற்றும் வெளிப்புறத்தின் தனித்துவமான வடிவமைப்புகள், தளவமைப்புகள், வண்ணங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் அனைத்தும் எங்கள் அனுபவம் வாய்ந்த, திறமையான மற்றும் தகுதி வாய்ந்த நிபுணர்களின் குழுவால் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், இந்த திட்டத்தின் 50% இற்கும் அதிகமானவற்றை நாங்கள் விற்றுவிட்டோம் என்பதற்காக மட்டுமல்ல, இந்த இடம் உங்கள் வாழ்க்கையில் புதிய அர்த்தத்தை சேர்ப்பதுடன், உங்களுக்கு தகுதியான ஆறுதலையும் அளிக்கும் என்பதற்காகவாகும், என்றார்.

Clover by Prime Signature Villas, 54 பிரத்தியேக வில்லா மனைகளைக் கொண்டுள்ளது. இது ஒவ்வொன்றும் 3238 சதுர அடி முதல் 4385 சதுர அடி வரையானவை. அவை 16 வெவ்வேறு வகைகளில் விசாலமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், புத்தாக்க கற்பனையின் உச்சத்தை பிரதிபலிப்பனவையாக அமைந்துள்ளன. தலவத்துகொடையில் அமைதியான 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள Clover villas, அதன் வதிவாளர்களுக்கு முதற்தர வசதிகளான மரத்திலான தரைதளங்கள், குளிரூட்டப்பட்ட படுக்கையறைகள், ஐரோப்பிய தரத்திலான பொருத்துதல்கள் கொண்ட குளியலறைகள், முழுமையாக பொருத்தப்பட்ட பேண்ட்ரி, சோலார் பேனல்கள் மூலமான கொதிநீர் இணைப்புகள், விசாலமான rooftop terraces மற்றும் ஓய்வினை வழங்கும் ரம்யமான வீட்டின் பின்புறபகுதி போன்றவற்றை வழங்குகின்றன.

மேலும், 24 மணிநேர பாதுகாப்புடன் கூடிய `கேட்டட் கம்யூனிட்டி, வசதியான ஓய்விடமாக இயங்கும் ஒரு நேர்த்தியான திறந்தவெளி லொபி, மரத்தாலான டெக் கொண்ட ஒரு பிளஞ் நீச்சல்தடாகம், ஒரு முழுமையான உடற்பயிற்சி கூடம், புல்வெளிகள் மற்றும் பசுமையான குளங்கள் போன்ற காட்சிகளுடன் கூடிய அழகுபடுத்தப்பட்ட ஒரு அமைதியான யோகா டெக் போன்ற அனைத்தும் Clover இல் வாழ்வினை அழகியல்மிக்கதாகவும், ரம்யமானதாகவும் மாற்றுகின்றன.

இந்த பகுதியில் மிகவும் விரும்பப்படும் கொழும்பின் புறநகரான தலவத்துகொடையில் அமைந்துள்ள Clover மனைத்திட்டமானது நவீனத்துவம் செழுமையடைந்து ஒற்றுமை நிலவும் மன நிம்மதியுடன் கூடிய பயணத்தை வழங்குகின்றது. நகர்ப்புற வசதிகள் மிக அருகாமையில் இருப்பதால், Corea கார்டனில் உள்ள Clover வதிவாளர்கள் நகர வாழ்க்கையின் உத்வேகத்தை பசுமையின் அமைதியுடன் இணைத்து அழகிய வாழ்க்கையை முன்னெடுப்பது உறுதி செய்யப்படுகின்றது.

தலவத்துகொடையில் அமைந்துள்ள Clover இன் கனவு இல்லங்கள் மற்றும் பிரத்தியேக வில்லா மனைகள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ள, விஜயம் செய்யுங்கள்: www.primelands.lk/lands/clover- thalawathugoda மற்றும் அழையுங்கள் 0703004411

Prime Group தொடர்பில்,

பூமியில் சிறந்த இடத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாடு என்ற தொலைநோக்குப் பார்வையுடன் 1995 ஆம் ஆண்டு Prime Group ஸ்தாபிக்கப்பட்டது. நான்கு ஊழியர்களுடன் எளிமையாக தொடங்கிய இந் நிறுவனம் தற்போது இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளதுடன், நாட்டின் பிரதான பகுதிகளில் பல தனிப்பட்ட வீட்டுத் திட்டங்கள் மற்றும் தொடர்மாடி மனை வளாகங்களைக் கொண்டுள்ளது. இலங்கை ரியல் எஸ்டேட் துறையில் Moody’s முதலீட்டு சேவைகளின் குழும நிறுவனமான ICRA Lankaவிடமிருந்து A- (Stable) என்ற பிரத்தியேக கடன் தரப்படுத்தலை பெற்றுக்கொண்ட முதல் நிறுவனம் Prime Group ஆகும். புகழ்பெற்ற இந் நிறுவனம் தற்போது ஒரு தனியார், குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்திலிருந்து, அதன் பங்குதாரர்களை அடிப்படையாகக் கொண்டு பொது நிறுவனமாக மாற்றமடைய எதிர்பார்ப்பதுடன், பிராந்தியத்தில் ஒரு தனித்துவமான சர்வதேச அடையாளத்துடன் திகழ்வதுடன், எதிர்காலத்தில் ஆரம்ப பொது வழங்கலுக்கும் செல்லும் திட்டத்தைக் கொண்டுள்ளது.

 

Related posts

மிளகாய் இறக்குமதிக்கும் வருகிறது தடை

முட்டை இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்

சீகிரியவை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு