உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக பலத்த பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு வாரத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான தேவாலயங்களில் மற்றும் இனங்காணப்பட்ட சில பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் உயிர்த்த ஞாயிறு வாரம் பூராவும் அமுலில் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

MV XPRESS PEARL சிதைவுகளை அகற்றும் ஆரம்ப பணிகள் ஆரம்பம்

முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று

கொழும்பு பிரபல பாடசாலையின் 20 மாணவர்கள் கைது