கிசு கிசு

சாபத்தினால் சிக்கிய ‘எவர் கிவன்’

(UTV |  எகிப்து) – சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியதற்கு பார்வோன்களின் சாபம்தான் காரணம் என சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி பயணித்த சரக்கு கப்பல் எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் கடந்த வாரம் சிக்கிக்கொண்டது. இதனால் 300க்கும் மேற்பட்ட கப்பல்கள் தொடர்ந்து பயணிக்க முடியாமல் சிக்கிக்கொண்டன. இந்த நெருக்கடியால் பல கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது.

சுமார் ஒரு வார முயற்சிக்கு பின் நேற்று கப்பல் விடுவிக்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில், சூயஸ் கால்வாய் உள்பட எகிப்தில் அண்மையில் நடைபெற்று வரும் பிரச்சினைகளுக்கு பார்வோன்களின் (Pharaoh) சாபம்தான் காரணம் என சிலர் கூறி வருகின்றனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து மம்மிக்களை வேறு இடத்துக்கு மாற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இது பார்வோன்களுக்கு பிடிக்கவில்லை எனவும், பார்வோன்களின் சாபத்தால் சூயஸ் கால்வாய் முடங்கியதாக சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

இதுபோக, கடந்த வெள்ளிக்கிழமை எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும், கெய்ரோவில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற துயர சம்பவங்களுக்கும் பார்வோன்களின் சாபம் காரணம் என்று கூறுகின்றனர்.

எனினும், பார்வோன்களில் சாபத்தால்தான் சூயஸ் கால்வாய் முடங்கியதாக வைக்கப்படும் கருத்துகளை தொல்லியல்துறை வல்லுநர்கள் நிராகரித்துள்ளனர். அதாவது, பார்வோன்களின் வரலாற்றுக்கு ஏற்ற பகுதிக்கு மம்மிக்கள் இடம் மாற்றப்படுவதால் அவர்களுக்கு மகிழ்ச்சியும், மரியாதையும்தான் கூடுமே தவிர சாபம் ஏற்படாது என தொல்லியல் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

பத்திரிகையாளர் ஜமால் மறைமுக மரண தண்டனைக்கு பலியாகியுள்ளாரா?

தனித்துப் பயணிக்க முடியாது

கொரோனாவும் ரணிலின் ஊடக அறிக்கையும்