(UTV | கொழும்பு) – மஹரகம – ஹைலெவல் வீதியில் பன்னிப்பிட்டிய சந்தியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரியின் செயலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் யோசித ராஜபக்ஷ கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் கணக்கில் தெரிவிக்கையில்;
“இன்று பரபரப்பான வீதியில் ஒரு பொலிஸ் அதிகாரி இரக்கமின்றி ஒருவரை அடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். சீருடை அணிந்த ஆண்கள் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்க கூடாது. அவர்களுக்கு பாதுகாப்பாகவும் காவல்காரர்களாகவும் இருக்க வேண்டும். நான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றேன், நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வேன்.” என பதிவிட்டுள்ளார்.
Shocked to see a police officer mercilessly beating a man on a busy road today over an accident. Uniformed men hold the responsibility of protecting & safeguarding civilians, not being a threat. I am in touch with the authorities & will ensure justice is meted out. pic.twitter.com/HECvY6tgQJ
— Y K Rajapaksa (@YoshithaR) March 29, 2021