உலகம்

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டினால் அமைச்சர் இராஜினாமா

(UTV |  பிரேசில்) – உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசியும் பிரேசிலில் போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பிரேசிலுக்கு தடுப்பூசிகளைப் பெறுவதில் வெளியுறவுத்துறை அமைச்சர் எர்னஸ்டோ அராஜோ இராஜாங்க முறையில் தோல்வி அடைந்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

வெளியுறவுத்துறை அமைச்சர் எர்னஸ்டோ அரோஜோ, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்புடன் நெருக்கமான நட்புறவு மற்றும் சீனாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது ஆகிய காரணங்களால் பிரேசில் போதிய அளவு தடுப்பூசிகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு பொறுப்பேற்று பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சுப் பொறுப்பை எர்னஸ்டோ அரோஜா இராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Related posts

மேலும் 14 நாடுகளுக்கு தடை விதித்தது ஜப்பான்

கொவிட் – 19 : சிகிச்சை முறை எதற்கும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை

இந்திய பயணிகளுக்கு ஞாயிறு முதல் தற்காலிக தடை