உலகம்

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர்கள் பதவி நீக்கம்

(UTV |  அவுஸ்திரேலியா) – பாலியல் குற்றம்சாட்டபட்ட ஆஸ்திரேலிய அமைச்சர்கள் கிறிஸ்டியன் போர்ட்டர் மற்றும் லிண்டா ரெனால்ட்ஸ் ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர், பிரதமர் ஸ்காட் மோரிசன் பல வார குழப்பங்களுக்குப் பிறகு அமைச்சரவை மறுசீரமைப்பை இன்று அறிவித்தார்.

போர்ட்டர் அட்டர்னி ஜெனரல் பதவியை இழந்தார். செனட்டர் ரெனால்ட்ஸ் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.செனட்டர் மைக்கேலியா கேஷ் அடுத்த அட்டர்னி ஜெனரலாகவும், பீட்டர் டட்டன் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்டியன் போர்ட்டர் அரசாங்கத்தின் உயர் சட்ட அதிகாரி மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் இருந்தார். 1988 இல் 16 வயது சக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அதை அவர் மறுத்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் தனது நாடாளுமன்ற அலுவலகத்தில் ஒரு இளம் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் விசாரணையை தவறாக கையாண்டதாகவும், லிண்டா ரெனால்ட்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இரு அமைச்சர்களும் பல வாரங்களாக விடுப்பில் இருந்தனர்.

போர்ட்டர் மற்றும் ரெனால்ட்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் ஆஸ்திரேலியா முழுவதும் எதிர்ப்புக்கள் கிளம்பின பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலின சமத்துவம் மற்றும் பாலியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி வீதிகளில் இறங்கி போராடினர்.

   

Related posts

லசா காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பலி

இந்தியாவிற்கு வரும் முதல் ஆபத்து இலங்கையிலிருந்தே வரும் – வைகோ

WhatsApp இற்கு புதிய வசதிகள்