விளையாட்டு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இராஜதந்திர கிரிக்கெட் போட்டி

(UTV | கொழும்பு) – பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வை ஒட்டி இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் 27.03.2021 சனிக்கிழமை அன்று இராஜதந்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இப்போட்டியில் பல்வேறு உயர் ஸ்தானிகராலயங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. போட்டியின் தொடக்க விழாவில் தூதரக முக்கிய உறுப்பினர்கள் உட்பட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

உள்ளூர் வர்த்தக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்கிய அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

5 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில சர்வதேச செஞ்சிலுவை சங்க அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மது சாத் கட்டாக் 1வது மற்றும் , 2 வது இடம் பெற்ற அணிகளுக்கான வெற்றிக்கிண்ணத்தையும் மற்றும் 3 வது இடத்தைப் பெற்ற அணி , நடுவர்கள் ஆகியோருக்கான பரிசுகளையும் வழங்கி கெளரவித்தார்.

No description available.

No description available.

No description available.No description available.No description available.No description available.No description available.No description available.No description available.No description available.

 

Related posts

மூன்றாவது இருபதுக்கு- 20 போட்டி இன்று

PSL தொடரில் விளையாட இரு இலங்கை வீரர்களுக்கு சந்தர்ப்பம்

நுவன் சொய்சாவிற்கு ஐசிசி இனால்6 வருட கால தடை