வணிகம்

சந்தையில் விஷம் கலந்த மிளகாய்த்தூள்

(UTV | கொழும்பு) –  விஷம் கலந்த மிளகாய்த்தூள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உணவு இறக்குமதி செய்யும் போது, சுகாதார பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயும் வேலைத்திட்டமொன்றை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த கோரிக்கையை அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த விடுத்துள்ளார்.

இவ்வாறான வேலைத்திட்டமொன்று இல்லாமை காரணமாகவே, உடம்புக்கு ஒவ்வாத பல உணவு பொருட்களை மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, உணவு இறக்குமதியின் போது, பால் மா மற்றும் காய்ந்த மிளகாய் இறக்குமதிகளின் போதும், இவ்வாறான சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

S1 உடன் இலங்கை சந்தையில் அறிமுகமாகும் vivo S வரிசை

அரிசி கொள்வனவு செய்யும் போது எச்சரிக்கை

vivo V19 செல்பி திறன்களை பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு