உலகம்

‘எவர் க்ரீன்’ லேசாகத் திரும்பியது

(UTV | எகிப்து) – சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டிய ‘எவர் க்ரீன்’ கப்பலை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் பகுதியில் உலகின் ராட்சச சரக்கு கப்பல்களில் ஒன்றான ‘எவர் க்ரீன்’ கப்பல் கடந்த வாரம் தரைதட்டியது. ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான ஷார்ட் கட் கடல்வழி பகுதியாகும் இது.

இங்கு கடந்த வாரம் 2 லட்சம் டன் எடை கொண்ட சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்ற ‘எவர் க்ரீன்’ கப்பல் தரைதட்டியது. புயல் காற்றில் வேகமாக திரும்பிய ‘எவர் க்ரீன்’ கப்பல் இரண்டு பக்கமும் பக்கவாட்டாக மோதி… மொத்த போக்குவரத்தையும் மறைக்கும் வகையில் தரைதட்டியது.

இந்த ‘எவர் க்ரீன்’ கப்பலை தரை தட்டியதில் இருந்து மீட்க இரண்டு விதமான பிளான்கள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி இழுவை கப்பல்கள் எனப்படும் டக் போட்களை வைத்து இந்த ‘எவர் க்ரீன்’ கப்பலை இழுக்க முயன்று வருகிறார்கள். இழுவை கப்பல்கள் என்பது இன்னொரு கப்பலில் கயிறை கட்டி இழுக்கும் கப்பல் ஆகும். இதை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ‘எவர் க்ரீன்’ கப்பலை திசை மாற்றி வருகிறார்கள்.

ஆனால் என்ன ஆனால் இந்த கப்பல் தரை தட்டிய வேகத்தில் பல லட்சம் மணல் மற்றும் களிமண் கப்பலுக்கு கீழே சேர்ந்துவிட்டது. இதனால் இழுவை கப்பல்களை வைத்து இதை இழுக்கும் முன் முதலில் களிமண்ணை புல்டோசர் மூலம் அகற்ற வேண்டும். இதற்கான பணிகள்தான் தற்போது நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 1.5 லட்சமும் மணலை அகற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதுவரை பல்லாயிரம் டன் களிமண் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. லேசாக மாறியது இதுவரை மணல்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் லேசாக தண்ணீர் செல்ல தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சில சென்டிமீட்டர்கள் இந்த கப்பல் திரும்பி உள்ளது. லேசாக கப்பல் திரும்பி உள்ளது. இந்த இழுவை மேஜிக்தான் கைகொடுத்துள்ளது.

கப்பலின் ரட்டர்களை இயக்கி லேசாக அதை திருப்பி உள்ளனர். ஆனால் இன்னும் பல லட்சம் டன் மணலை நீக்கினால் மட்டுமே கப்பலை மொத்தமாக திருப்பி முடியும். அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும். இழுவை இதற்காக 150 இழுவை கப்பல்களை கொண்டு வர உள்ளனர். 150 இழுவை கப்பலை இந்த வாரமே களமிறக்கி. தேர் போல இந்த சூயஸ் கப்பலை இழுக்க போகிறார்கள். இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் பிளான் பி ஒன்றையும் களமிறக்க உள்ளனர் . அதன்படி இந்த கப்பலில் இருக்கும் கண்டெயினர்களை நீக்கும் முடிவில் உள்ளனர்.

Related posts

பொது இடங்களில் பெண்கள் முழுவதுமாக பர்தா அணிய வேண்டும்

இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு தடை – பாகிஸ்தான் அரசு முடிவு.

தனக்கென சொந்த சமூக வலைத்தளம்