கேளிக்கை

துல்கரின் ‘குருப்’ டீசர் [VIDEO]

(UTV |  இந்தியா) – கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றியை தொடந்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் குருப் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.


தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான், மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார். துல்கர் நடிப்பில் தற்போது ‘குருப்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குருப் திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்‌ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்க நிதின் கே.ஜோஷ் கதையினை எழுதியுள்ளார். திரைக்கதை மற்றும் வசனத்தை டேனியல் சயூஜ் நாயர் மற்றும் கே.எஸ்.அரவிந்த் இணைந்து எழுதியுள்ளனர்.

Related posts

‘கே.ஜி.எஃப் 2’ : செப்டம்பரில்

கங்கனா ரனாவத், விஜய்யிடம் முன்வைத்த கோரிக்கை

‘அருவி’ இந்தியிலும் ரீமேக்