(UTV | இந்தியா) – உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க வாருங்கள் என பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரும் ஏப்ரல் மாதம் 22, 23 ஆகிய திகதிகளில் உலக சுற்றுச்சூழல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். காணொளி வாயிலாக நடைபெறும் இந்த மாநாட்டில் 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியபோது காணொளி வாயிலாக நடைபெறும் உலக சுற்றுச்சூழல் மாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமை வகிக்க உள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புதின் உள்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்றும் அவர்கள் அனைவரும் அந்த அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி காணொளி வாயிலாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.