உலகம்

வட கொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனையில்

(UTV |  வட கொரியா) – ஆசிய நாடான வட கொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டுள்ளது. நிறுத்தப்பட்ட அணு ஒப்பந்த பேச்சைத் தொடர அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பாக வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே 2018ல் பேச்சு நடந்தது. ‘வட கொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை முழுமையாக நீக்க வேண்டும்’ என வட கொரிய தலைவர் கிம் ஜான் உன் வலியுறுத்தினார். ஆனால் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் அதை ஏற்கவில்லை. இதையடுத்து பேச்சு நின்றது.

அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் பல்வேறு ஏவுகணைகள் அணு ஆயுதங்கள் சோதனையில் வட கொரியா தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.கடந்தாண்டு ஏப்ரலுக்குப் பின் தன் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்த நிலையில் இரண்டு ஏவுகணைகளை செலுத்தி சோதனையில் வட கொரியா நேற்று ஈடுபட்டது.நிறுத்தப்பட்ட பேச்சைத் தொடரும்படி அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

ஆனால் வடகொரியா குறித்த கொள்கையை புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை.அமெரிக்காவின் கொள்கை முடிவின்படியே வட கொரியாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவை ஆதரிக்கிறேன்

சூரியனை அடைந்து வரலாற்று சாதனை படைத்த நாசா விண்கலம்

விசா சட்டத்தை மாற்றிய ஓமான்!