உலகம்

பிரதமர் மோடியும் பங்களாதேஷ் நோக்கி

(UTV |  புதுடில்லி) – கொரோனா காரணமாக கடந்த 15 மாதங்களாக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணத்தை இரத்து செய்திருந்த நிலையில், மோடி பங்களாதேஷ் நோக்கி பயணித்துள்ளார்.

பங்களாதேஷ் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். இந்த பிரிவினையை இந்தியா முன் நின்று நடத்தியது. இதன் காரணமாக இந்தியா- பங்களாதேஷ் இடையே நல்ல நட்புறவு நீடித்து வருகிறது.

பங்களாதேஷ் சுதந்திரம் பெற்று இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அதை தேசிய தினமாக பங்களாதேஷ் கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு பங்களாதேஷப் பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார்.

இன்றும், நாளையும் 2 நாட்கள் பங்களாதேஷில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இன்று பங்களாதேஷின் தேசிய தின விழா நடக்கிறது. அதோடு ஷேக் முஜிபூர் ரகுமானின் 100வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டமும் தொடங்கியது. இந்த விழாக்களில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

வங்கதேச ஜனாதிபதி அப்துல் ஹமீது, பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். அப்போது இந்தியா- வங்கதேசம் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தாய்லாந்து துப்பாக்கி சூட்டு சம்பவம் – இராணுவ சிப்பாய் சுட்டுக் கொலை

சூடான் பிரதமர் பதவி இராஜினாமா

கொரோனா வைரஸ் – இந்தியாவில் முதல் உயிரிழப்பு