விளையாட்டு

வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக மீண்டும் சமிந்த

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக மீண்டும் சமிந்த வாஸை நியமிப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

´நாம் மீண்டும் சமிந்த வாஸினை எடுத்துள்ளோம். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும். இலங்கையின் கிரிக்கெட் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கு இதை விட ஒரு சிறந்த குழுவொன்று எமக்கு கிடைத்ததில்லை. கிடைக்கவும் கிடைக்காது. அரவிந்த, ரொஷான் மஹானாம, முரளி, சங்கா, மஹேல இவர்கள் அனைவரும் இணைந்து கலந்துரையாடிதான் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் எந்தவித பிரச்சினையும் இல்லை´ என்றார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சி ஆலோசகராக இதற்கு முன்னர் சமிந்த வாஸ் செயற்பட்ட நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் அவர் பதவி விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மொஹமட் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்த அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரரின் சகோதரர் கைது

இலங்கை மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு பாதிப்பு

இந்தியாவை எதிர் கொண்டு மேற்கிந்தியத்தீவுகள் 125 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வி