உள்நாடு

சகல பாடசாலைகளும் திங்கள் முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) – சகல அரச பாடசாலைகளையும் ஆரம்பிப்பது சம்பந்தமான விசேட சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் உள்ள சகல பாடசாலைகளிலும், சகல வகுப்புகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஏதாவதொரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டிருக்குமாயின், குறித்த தனிமைப்படுத்தல் காலப்பகுதி நிறைவடையும் வரை அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலைகள் மாத்திரம் தற்காலிகமாக மூடப்படும்.

சுகாதார பாதுகாப்பு நிறைந்த இடமாக பாடசாலைகளை தயார்படுத்தும் வேலைத்திட்டம் நாளை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை முன்னெடுக்கப்படவுள்ளன.

பிள்ளைகளின் உளவியல் சுகாதாரத்தை பேணுவதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

ஆள் இடைவெளியை பேணி, வகுப்புகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் பற்றி வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் பிரகாரம், 15 மாணவர்களை கொண்ட வகுப்புகளுக்கு பாடசாலை நாட்களில் பாடசாலை நடைபெறும்.

முப்பது மாணவர்கள் வரை கொண்ட வகுப்புகளை இரண்டு பிரிவுகளாக பிரித்து, ஒரு பிரிவிற்கு ஒரு வாரமும், அடுத்த பிரிவிற்கு மற்றைய வாரமும் என்ற வகையில், கற்றல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.

முப்பது மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகள் மூன்று பிரிவுகளாக பிரித்து கல்வி நடவடிக்கைகள் நடத்தப்பட வேண்டும் என்று வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

நாளை குறித்து தீர்மானிக்க ஆளும் கட்சியினர் கூட்டம் இன்று

வடக்கு-கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் – அமைச்சரவை அங்கீகாரம் என்கிறார் டக்ளஸ்