உள்நாடு

இந்திய மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்பரப்பில் கைது

(UTV | கொழும்பு) – வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த மீனவர்கள் பயணித்த 5 மீனவ படகுகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் நேற்று இரவு குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கையூடாக குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

நவம்பரில் கூடும் பாராளுமன்றம்- முக்கிய நிகழ்வுகள்

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலம் – குழு நியமனம்

உக்ரைன் இராணுவத்தில் இணைய ஆர்வம் காட்டும் இலங்கை படையினர்!