உள்நாடு

அரசினுள் ஸ்ரீ.சு.கட்சிக்கு தொடர்ந்தும் பாரபட்சம்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு தொடர்ந்தும் பாரபட்சம் காட்டப்படுவதாக அதன் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அதன் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த தயாசிறி ஜயசேகர;

“.. கட்சியின் உப செயலாளர் பதவிகளுக்காக மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய பிரசார செயலாளராக சாந்த பண்டார தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு அலுவல்கள் தொடர்பான உப செயலாளராக சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சட்டம்சார்ந்த விடயங்கள் தொடர்பான உப செயலாளராக சாரதி துஸ்மந்தவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
எவ்வாறாயினும் இது தொடர்பான இறுதி தீர்மானம் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.
அடுத்த வாரத்திலும் மீண்டும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்கம் கூட்டாக இணைந்து உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும்

எனவே, எதிர்வரும் காலங்களிலும் கூட்டணியாக செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
எவ்வாறாயினும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட முடியாது..” என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

கட்சியை பலப்படுத்தும் நோக்கிலேயே எதிர்வரும் நாட்களில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இந்நிலையில் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் பாகுபாடு நிலவுகின்றதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பதலளித்தார்.

Related posts

ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

மஹிந்தவுக்கு மோடியிடம் இருந்து வாழ்த்து

 கொலை சம்பவங்களுக்கு உதவியவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.