உலகம்

பிரித்தானியாவை விட்டு வெளியேறுவோருக்கு அபராதம்

(UTV |  பிரித்தானியா) – கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு 5000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என பிரித்தானியா அரசு அறிவித்துள்ளது.

உலகளவில் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. பிரித்தானியாவில் ஏற்கெனவே உருமாறிய கொரோனாவால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

தற்போது பிரித்தானியாவின் அண்டை நாடுகளில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. எனவே, நிலைமையை கட்டுக்குள் வைக்கும் நோக்கில், பிரிட்டனில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் மீது அபராதம் விதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதன்படி, பிரித்தானியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிப்போர் மீது தலா 5000 பவுண்ட் (5 லட்சம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டின் சுகாதார துறை செயலாளர் மாட் ஹேன்காக் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் இறுதிவரை இந்த அபராத முறை அமுலில் இருக்கும்.

இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஈசிஜெட், பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஜெட்2, டியூஐ உள்ளிட்ட விமான நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன. தற்போதைய சூழலில் பிரிட்டனில் சுற்றுலா பயணங்கள், கோடை விடுமுறை பயணங்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஷ்ய இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் கிடங்கில் வெடிப்பு

தென்னாபிரிக்காவிலும் புதிய வகை கொரோனா

தோல்வியின் அடி : மெலேனியாவும் பதிலடி