வணிகம்

புத்தாண்டில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கும்

(UTV | கொழும்பு) – தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில், அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமென, இலங்கை அனைத்து பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகள், வரி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவையை அடிப்படையாகக் கொண்டே, குறித்தவிலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக, அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எண்ணெய், பட்டருக்கு அதிக வரி விதிக்கப்படுவதால், பேக்கரி தொழில் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் அதனால், பேக்கரி தொழிலை நடத்துவதில் உரிமையாளர்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மற்றைய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அச்சங்கத்தின் தலைவர், இது குறித்துத் தெரிவித்தும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச்சாடியுள்ளார்.

Related posts

இலங்கையின் முதலாவது மாம்பழ உற்பத்தி அபிவிருத்தி வலயம்

கடனுதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்

சுற்றுலாத்துறை வருமானத்தை 700 கோடி டொலர் வரை அதிகரிக்கத்திட்டம்