கேளிக்கை

நகுலால் தங்கத்தை பிரிய முடியவில்லை [VIDEO]

(UTV | இந்தியா) – நடிகர் நகுல் பிக்பாஸ் 5ல் கலந்துகொள்ளப்போகிறார் என கூறப்பட்ட நிலையில் அந்த செய்தி உண்மையில்லை என நகுல் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நான்காவது சீசன் முடிந்து இரண்டு மாதம் மட்டுமே ஆகிறது. இந்நிலையில் தற்போது அடுத்த சீசனுக்கு முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. போன வருடம் கொரோனா காரணமாக மிகவும் தாமதமாக பிக் பாஸ் தொடங்கிய நிலையில் அடுத்த சீசன் வழக்கம்போல ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் 5வது சீசனில் போட்டியாளராக யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கின்றனர். இதற்கு முந்தைய வருடங்களை போல இந்த முறையும் பல தகவல்கள் ஊகத்தின் அடிப்படையில் தான் பரவிக்கொண்டிருக்கின்றன.

பிரபல நடிகர் நகுலுக்கு பிக்பாஸ் 5ல் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என சமீபத்தில் தகவல் பரவியது. நகுல் சினிமாவில் இருந்து சமீப வருடங்களாக ஒதுங்கி இருந்து வரும் நிலையில் அவருக்கு இது ரீஎன்ட்ரியாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் தனக்கு அப்படி எந்த வாய்ப்பும் வரவில்லை என நகுல் கூறியுள்ளார். ‘என்னை யாரும் அணுகவில்லை, அப்படியே அணுகினாலும் என் குழந்தையை விட்டு போகமாட்டேன்’ என நகுல் கூறி இருக்கிறார்.

Related posts

ஒலிவியா நியூட்டன் ஜோன் காலமானார்

தன் குழந்தையுடன் விளையாடும் எமி [PHOTOS]

ஸ்பைடர் மேன் கைது