உள்நாடு

புத்தாண்டு சம்பிரதாயங்களை பாதுகாப்பான முறையில் முன்னெடுக்கவும்

(UTV | கொழும்பு) –  சமகாலத்தில் பல வெளிநாடுகளில் கொவிட் 19 தொற்றாளர்கள் பாரிய அளவு அதிகரித்து வரும் நிலையில் தமிழ், சிங்கள புத்தாண்டு சம்பிரதாயங்களை பாதுகாப்பான முறையில் முன்னெடுத்து, வீட்டினுள் இருக்குமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

விசேடமாக எதிர்வரும் பண்டிகை காலப்பகுதில் மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களுக்கு செல்லாமல், சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளாமல் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் புத்தாண்டு கொண்டாட முடியாமல் போனது. இம்முறை புத்தாண்டினை வீட்டினுள் கொண்டாடுவதன் மூலம் கொவிட் தொற்றினை மேலும் கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் தடுப்பூசி வேலைத்திட்டம் தற்போது வரையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் முன்வருவது மிகவும் முக்கியம் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கல்வி நிர்வாக சேவையாளர் தொழிற்சங்கம் அரசுக்கு எச்சரிக்கை

அமெரிக்கா ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரு மரணங்கள் பதிவு