உள்நாடு

ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்கும் சேவை

(UTV | கொழும்பு) – ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்கும் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொது மக்கள் ஒன்று கூடுவதனை தடுப்பதற்காக இந்த சேவை கடந்த காலங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தேசிய அடையாள அட்டையை பெறுவோர், பத்தரமுல்ல தலைமை அலுவலகம் அல்லது தென் மாகாண பிராந்திய அலுவலத்திற்கு நேரடியாக வருவதற்கு முன்பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

அதற்காக தங்கள் பிரதேச செயலக அலுவலகத்தின் அடையாள அட்டை பிரிவின் 011 5 226 126 அல்லது 011 5 226 100 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி அந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் பொது சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு எதிர்பார்க்கும் நபர்கள் தங்கள் கோரிக்கைளை கிராம சேவகர் மூலம் பிரதேச செயலக அடையாள அட்டை பிரிவிற்கு அனுப்ப முடியும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த கோரிக்கை திணைக்களத்திற்கு கிடைத்த பின்னர் தேசிய அடையாள அட்டை அச்சிட்டு விண்ணப்பதாரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

தமிழ் வழிப் பள்ளிகள் இன்றும் மூடப்படும்

​கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

அதிபர்கள் இடமாற்றல் முறைமையில் எழுந்துள்ள சிக்கல்!