உள்நாடு

நீர் வழங்கல் தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்

(UTV | கொழும்பு) – சம்பள உயர்வு வழங்கப்படாத நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நீர்வழங்கல் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் சம்பள உயர்வு இதுவரை தமக்கு அவ்வாறு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என நீர் வழங்கல் தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், அதனை வழங்குவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, சம்பள முரண்பாடுகள் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு தொழிற்சங்கள் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

சுற்றாடல் அழிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்

பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்