(UTV | கொழும்பு) – ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல் உள்ளிட்ட காரணிகளை சுட்டிக்காட்டி குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இந்த பிரேரணையை பிரித்தானியா, ஜேர்மன், கனடா, மலாவி, மொண்டிநீக்ரோ மற்றும் வட மெசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து சமர்ப்பித்திருந்தன.
47 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்றைய தினம் இடம்பெறவிருந்தது.
எவ்வாறாயினும், பிரேரணை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட நேர சிக்கல் காரணமாகவே இன்று வரை வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளது.
இதற்கு அமைய 46 ஆவது மனித உரிமைகள் கூட்டதொடரின் 46 எல்/1 ஆம் இலக்க இலங்கை தொடர்பான பிரேரணை ஜெனீவா நேரப்படி இன்று முற்பகல் 9 மணிக்கு விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.