கேளிக்கை

மகாத்மா காந்திக்கு ஐஸ் சிலை

(UTV | கொழும்பு) – இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கனடாவில் மகாத்மா காந்திக்கு ஐஸ் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் திகதி இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், கனடாவில் பிரபல ஹோட்டலில் மகாத்மா காந்தியின் ஐஸ் சிலை நிறுவப்பட்டுள்ளது.

கனடாவின் கியூபக் நகரில் உள்ள பிரபல ‘Hotel de Glace’ ஹோட்டலில்தான் மகாத்மா காந்தியின் ஐஸ் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையின் உயரம் ஏழு அடி. மார்க் லெபயர் என்ற ஐஸ் சிற்பக்கலை வல்லுநரால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அழகிய சிலையின் படத்தை டொரோண்டோவில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. மார்க் லெபயர் ஒன்பது பிளாக் ஐஸ்களை பயன்படுத்தி ஐந்து மணி நேரத்தில் இச்சிலையை உருவாக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

காந்தி சிலையை வடிவமைத்தது தனது உற்சாகத்தை தந்ததாக மார்க் லெபயர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிந்து சாம்பலான விஜய்யின் டிசைனர் சென்ற கார்!

ஆஸ்கர் விருது வழங்கும் விழா – 2021

புற்றுநோய் குணமடைவதாக தகவல்-சோனாலி