(UTV | ஜமைக்கா) – ஜமைக்காவுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை அனுப்பியதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிறிஸ் கெய்ல் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு இந்திய மக்கள், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றியைப் பதிவு செய்துள்ளார்.
Legendary Jamaican & WI Cricketer @henrygayle thanks PM @narendramodi, the People and Government of #India for the gift of #MadeInIndia Vaccine to #Jamaica#VaccineMaitri @PMOIndia @DrSJaishankar @MEAIndia @IndianDiplomacy pic.twitter.com/fLBbhF5zTY
— India in Jamaica (@hcikingston) March 19, 2021
முன்னதாக மற்றொரு மேற்கிந்திய தீவுகள் வீரர் ஆந்த்ரே ரசல், பிரதமர் மோடிக்கு நன்று தெரிவிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய தூதருக்கும் பெரிய பெரிய பெரிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தடுப்பூசிகள் ஜமைக்காவுக்கு வந்துள்ளன, நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம். உலகம் இயல்பு நிலைக்குத் திரும்புவதை நாம் விரும்புகிறோம். ஜமைக்கா மக்கள் இதனை உண்மையில் வரவேற்றுள்ளனர். நம் இருநாடுகளும் நெருக்கத்துக்கும் அதிகமான உறவு கொண்டுள்ளதையே இது காட்டுகிறது. இந்தியாவும் ஜமைக்காவும் இப்போது சகோதரர்கள்.” என்று கூறியிருந்தார்.
இந்தியா முதலில் 50,000 டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகளை ஜமைக்காவுக்கு அனுப்பியது. இதற்கு ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹால்னெஸ் நன்றி தெரிவித்தார். ஆஸ்ட்ரா ஜெனகாவின் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் அங்கு நன்கொடையாக அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் நட்சத்திரங்கள், விவ் ரிச்சர்ட்ஸ், ரிச்சி ரிச்சர்ட்ஸன், ஜிம்மி ஆடம்ஸ், சர்வான் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.