உலகம்

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்தின் மூன்று வாரங்களுக்கு முன்பு, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், பிறந்த குழந்தையை பரிசோதனை செய்து பார்த்ததில் மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா (Florida) மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர், தன்னுடைய பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியுள்ளார்.

மாடர்னா (Moderna) தடுப்பூசி போட்டுள்ள அந்த பெண்ணுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், அந்த குழந்தையை பரிசோதித்து பார்த்ததில், அதன் உடலில் கொரோனாவுக்கான எதிர்ப்புச் சக்தி இயற்கையாகவே உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளமை மருத்துவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஃபுளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, அதிலிருந்து உருவான எதிர்ப்பு சக்தி, தாயின் நஞ்சுக் கொடி (Placenta) வழியாக மற்ற ஊட்டச்சத்துக்களுடன் சேர்ந்து கிடைத்திருக்க கூடும் என்கின்றனர்.

மேலும், கொரோனா தொற்றின் மூலம் பாதிக்கப்படாத கர்ப்பிணி பெண், தடுப்பூசி செலுத்திக் கொண்ட சில வாரங்களிலேயே குழந்தை பிறந்ததும், அதன் உடலுக்கு ஆன்டிபாடிகள் கடத்தப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனினும் , எத்தனை நாளைக்கு இன்னும் அந்த குழந்தையின் உடம்பில், இந்த நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதும், நோய்க் கிருமியிடம் இருந்து எந்த அளவுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை எனவும் அவர்கள் கூறுயுள்ளனர்.

Related posts

நான்காவது தடுப்பூசிக்கு இஸ்ரேல் தயார்

சவுதி அரேபிய மன்னர் மருத்துவமனையில் அனுமதி

இந்திய வைரஸ் இனால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்