விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு 8 ஆண்டுகள் தடை

(UTV | ஐக்கிய அரபு அமீரகம்) – ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வீரர்கள் முகமது நவீத் மற்றும் ஷய்மான் அன்வர் பட் ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றின் போது ‘மேட்ச்பிக்சிங்’ என்ற சூதாட்டத்தில் ஈடுபட முயற்சித்தது அம்பலமானது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஊழல் தடுப்புவிதிமுறையை மீறிய அவர்கள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஐ.சி.சி.யின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி நடத்திய விசாரணை முடிவில் இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இடை நீக்கம் செய்யப்பட்ட 2019-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து தடை காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஐக்கிய அரபு அமீரக அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான 33 வயதான முகமது நவீத் 39 ஒரு நாள் போட்டிகளிலும், 31 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

தொடக்க வரிசை பேட்ஸ்மேனான 42 வயதான ஷய்மான் அன்வர் அமீரக அணிக்காக 40 ஒரு நாள் மற்றும் 32 இருபது ஓவர் போட்டிகளில் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ICC சிறந்த வீரருக்கான விருதை பெற்ற வனிந்து ஹசரங்க!

உள்நாட்டு ரசிகர்களுக்கும் அனுமதி

புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ் கைது