உள்நாடு

சில அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில்

(UTV | கொழும்பு) – பல கோரிக்கைகளை முன்னிறுத்தி ரயில்வே சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.

அத்துடன் தொழிற்சங்கத்திற்கும் ரயில்வே பொது முகாமையாளர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையை அடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரயில்களை இயக்கும் போது இடம்பெறும் செயல்பாட்டு பிழைகள் காரணமாக ரயில்வே ஊழியர்களிடமிருந்து இழப்பீடுகளை அறவிட அரசாங்கம் எடுத்த முடிவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அனுர பீரிஸ் தெரிவித்தார்.

அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் வெற்றியளிக்காததால் இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ரயில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்ட போதிலும் வேறு ஊழியர்களை பயன்படுத்தி அலுவலக ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பிரதான ரயில் வீதியில் ஐந்து அலுவலக ரயில்களையும் கடலோர ரயில் வீதியில் 4 அலுவலக ரயில்களையும் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய ரயில் வீதிகளில் இரண்டு அலுவலக ரயில்கள் வீதம் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் போக்குவரத்து மட்டு

இளைஞர், யுவதிகளை மீளவும் தம்முடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு

கடத்தப்பட்ட சாரதி பொலிஸாரிடம் தஞ்சம்!