விளையாட்டு

இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு

(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியானது ஒருநாள் சர்வதேச உலகக் கிண்ணத்தை கைப்பற்றி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகின்றன.

1996 மார்ச் 17 என்பது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஒரு மறக்க முடியாத நினைவினை ஏற்படுத்திய நாள் ஆகும்.

1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு முன்னர், அதற்கு முன்னதாக அரங்கேறிய ஐந்து ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களிலும் இலங்கை நான்கு வெற்றிகளை பதிவு செய்திருந்தது.

எனினும் 1996 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான் அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் இலங்கை கிரிக்கெட் அணி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்தது இலங்கை லயன்ஸ். இந்த பருவத்தில் போட்டி முழுவதும் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி காலிறுதியில் இங்கிலாந்தையும், அரையிறுதியில் இந்தியாவையும் வீழ்த்தி இறுப் போட்டிக்குள் நுழைந்தது.

பாகிஸ்தானின் லாகூரில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை பந்து வீச்சாளர்கள் அவுஸ்திரேலிய அணியை 50 ஓவர்களில் 241/7 ஆக கட்டுப்படுத்தி ஒரு அற்புதமான பணியை முன்னெடுத்தனர்.

பந்து வீச்சில் ஒன்பது ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் அரவிந்த டி சில்வா. அது மாத்திரமன்றி துடுப்பாட்டத்திலும் தனது ஆதிக்கத்தை அவர் நிலை நிறுத்தினார்.

242 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை வெறும் 23 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் ஜோடி சேர்ந்த அரவிந்த டிசில்வா – அசங்கா குருஷின்ஹாவின் இணைப்பாட்டம் 101 ஓட்டங்களை அணிக்காக பெற்று கொடுத்தது.

பின்னர் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க 37 பந்துகளில் 47 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

அதன்படி இலங்கை அணி 46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 245 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக மூன்று விக்கெட்டுகளையும், 107 ஓட்டங்களையும் குவித்த அரவிந்த டிசில்வா தெரிவானார்.

1996 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் களமிறங்கிய இலங்கை அணி

சனத் ஜெயசூரியா, ரோமேஸ் களுவிதாரன (wk), அசங்கா குருஷின்ஹா, அரவிந்த டிசில்வா, அர்ஜூன ரணதுங்க, ஹசான் திலகரத்ன, ரோசான் ரோஷன் மகானாம, குமார் தர்மசேன, சமிந்த வாஸ், பிரமோதய விக்ரமசிங்க மற்றும் முத்தையா முரளிதரன்.

 

Related posts

தெற்காசிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான நான்கு நாள் போட்டி இன்று ஆரம்பம்

ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று

ஐபிஎல் வீரர்களுக்கும் தடுப்பூசிதான் ஒரே வழி