கிசு கிசு

‘புர்கா’ தடை : பாகிஸ்தான் அரசுக்கு ஏற்றவாறு நாம் செயற்படுவதில்லை

(UTV | கொழும்பு) – தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதால் இந்நாட்டினுள் புர்கா மற்றும் நிகாப் அணிவதை தடை செய்யும் அமைச்சரவை பத்திரத்தில் தான் கைச்சாத்திட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அத்மிரல் கலாநிதி சரத் வீரசேகர கடந்த தினம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது குறித்த விடயம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அத்மிரல் கலாநிதி சரத் வீரசேகர மீண்டும் கருத்து தெரிவித்திருந்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஏற்றவாறு நாம் செயற்படுவதில்லை. எமது அரசாங்கத்திற்கு ஏற்றவாறுதான் செயற்பட முடியும். அமைச்சரவையில் கலந்துரையாடி, பாராளுமன்றத்திற்கு சென்று பல செயற்பாடுகள் உள்ளன. என்றார்.

 

Related posts

சாப்பாட்டு விடுதியில் உணவு சப்ளை செய்யும் ரோபோக்கள்

அரசு திருடப்பட்ட பசுவை இழுக்கும் லாரி போன்றது

இலங்கை விடயங்களை உன்னிப்பாக அவதானிக்கும் நாடு?