(UTV | கொழும்பு) – சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஸாரா ஜயரட்ண தெரிவித்துள்ளார்.
கடந்த 10.03.2021 ஆம் திகதி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.