உள்நாடு

ரிஷாதுக்கு எதிரான பேச்சுக்கு விமலுக்கு நீதிமன்றினால் தடையுத்தரவு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை அவமதிக்கும் வகையில் வெறுக்கத்தக்க பேச்சுக்களை முன்னெடுப்பதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனால் தாக்கல் செய்யப்பட மனு இன்று(16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மாவட்ட நீதிபதி அருணா அழுக்கே இனால் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை குறித்த தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்சவினால், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை இலக்கு வைத்து பேசப்படும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் மூன்று தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் இவ்வாறு மாவட்ட நீதிபதியினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“ரிஷாட் பதியுதீனின் சகோதரர், ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார். அந்த அழைப்பின் பின்னர், அவர் தனது சகோதரரான ரிஷாட் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன் பின்னர் மீண்டும் அவர் சஹ்ரானுக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார். இந்த விடயத்தை பொலிசார் எம்மிடம் தெரிவிக்கவில்லை. மதிப்பிற்குரிய கர்தினால் அவர்களிடமே தெரியப்படுத்தியுள்ளனர். அவரது சகோதரர் கைதான போது, அவர் இதனை வியாபார ரீதியிலான தொலைபேசி அழைப்பு என்று கூறியுள்ளார்.”

அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த 09ம் திகதி இடம்பெற்ற “இஸ்லாமிய அடிப்படைவாதம்: உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுக்கு அப்பால்” – பொது பிரச்சாரம்’ என்ற நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்திருந்த மனு விசாரணையே இவ்வாறு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Related posts

ஜனாதிபதி – கெஹெலிய விசேட கலந்துரையாடல்

போதைப்பொருள் விற்பனை : 13 அதிகாரிகளும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கொழும்பில் மற்றுமொரு பகுதிக்கு ஊரடங்கு அமுல்