உலகம்

கொரோனாவுடன் இணைந்த வௌவால் வைரசுகள்

(UTV | சீனா) – சீனாவில் வௌவால் வைரசுகள் பற்றி ஷான்டோங் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷி வெய்போங் என்பவர் தலைமையில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வின் முடிவில் தென்மேற்கு சீனாவில் 4 கிலோ மீட்டர் கொண்ட குறைந்த அளவு பகுதிக்குள் இதற்கு முன்பு அறியப்படாத 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அவற்றில் 4 வைரஸ்கள் உலக நாடுகளில் பெருந்தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுடன் தொடர்புடையவை என்றும் அவற்றில் ஒரு வைரஸானது கொரோனா வைரஸின் மரபணுவை சுமந்திருந்தது என்பதும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

உலகில் பாதுகாப்பான நகரங்களில் ‘துபாய்’

கொரோனா வைரஸ் காரணமாக சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரத்து

அரசியலில் இருந்தே ஓய்வு பெறுகிறேன்