உள்நாடு

ஆயிரம் இழுபறி தொடர்கிறது

(UTV | கொழும்பு) –  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நா​ளொன்றுக்கான அடிப்படை சம்பளமான ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 5ஆம் திகதி முதல் அந்த வர்த்தமானி அறிவித்தல் அமுலில் இருந்தாலும், இம்மாதத்துக்கான சம்பளத்துக்கு அதிகரித்த தொகையை சேர்த்துக்கொள்ள முடியாத நிலைமையொன்று ஏற்படுமென தோட்ட நிர்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயிரம் ரூபாய்க்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட்-மனு​க்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுக்கள் விசாரணைக்கு உட்படுத்தி முடியும் வரையிலும் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை கோருவதற்கு மனுதார்கள் கலந்தாலோசித்து வருகின்றனர். அவ்வாறான இடைக்கால தடையுத்தரவு கிடைக்குமாயின் அதிகரிக்கப்பட்ட 1,000 ரூபாயை பெறுவதில் சிரமங்கள் ஏற்படுமென அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Related posts

கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் புதிய தகவல்

ஜூலை மாதத்துடன் காலாவதியாகும் கொவிட் தடுப்பூசிகள்

பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் தடை