(UTV | கொழும்பு) – நாட்டில் எதிர்வரும் சில வாரங்களில் அரிசியின் விலைகள் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக, மொத்த மற்றும் சில்லறை அரிசி விற்பனையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களின் செயற்பாடுகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக, மொத்த மற்றும் சில்லறை அரிசி விற்பனையாளர்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அரிசி வகைகளுக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்துள்ளதன் காரணமாக, ஆலை உரிமையாளர்கள் போக்குவரத்து கட்டணத்தை விற்பனையாளர்களிடம் இருந்து கோருவதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, மேலதிக கட்டணங்களை விதிப்பதாகவும், அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆகவே, அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, மொத்த மற்றும் சில்லறை அரிசி விற்பனையாளர்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, எதிர்வரும் சில வாரங்களில் அரிசி விலை அதிகரிப்பு அல்லது உள்ளூர் சந்தையில் அரிசி பற்றாக்குறை ஆகியன ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக, மொத்த மற்றும் சில்லறை அரிசி விற்பனையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.