உள்நாடு

கெசல்வத்த தினுக துபாயில் உயிரிழப்பு

(UTV | துபாய்) – பிரபல பாதாள உலக தலைவனும், போதைப் பொருள் கடத்தல் காரருமான கெசல்வத்த தினுக எனும் ஆர்.ஏ.தினுக மதுஷான் டுபாயில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுக்கொலை செய்தல், அச்சுறுத்தி கப்பம் பெறுதல், போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் விபசாரம் உள்ளிட்ட பாதாள உலகத்துடன் தொடர்புபட்ட பல திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் கெசல்வத்த தினுக பின்னணியில் செயற்பட்டிறுந்ததாக நம்பப்படும் நிலையில் அவர் பொலிஸாருக்கு அவசியமான சந்தேக நபராக விளங்கினார்.

இந்நிலையிலேயே அவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் டுபாய்க்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

தினுக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கசிந்த நிலையில், வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய அதிகார எல்லைக்கு உட்பட்ட, திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவுக்கு அருகே உள்ள கெசல்வத்த தினுகவின் வீட்டில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

தனது மகனின் சடலத்தை, உரிய பி.சி.ஆர். பரிசோதனைகளின் பின்னர் நாட்டுக்கு எடுத்துவர தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கெசல்வத்த தினுகவின் தாயார் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தினுகவின் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவிடம் வினவிய போது, அது குறித்து உத்தியோகபூர்வமான் அறிவிப்பு பொலிஸ் திணைக்களத்துக்கு கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சர்வதேச பொலிஸ் பிரிவுக் கிளை ஊடாக தொடர்பாடல்களை முன்னெடுத்து அத்தகவலை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

கைவிடப்பட்ட வீடுகளில் சமூக சீர்கேடுகள்-இஸ்லாமபாத் பகுதியில் சம்பவம்.

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ வந்தடைந்தது

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையம் வைத்தியசாலையாக மாற்றம்