உலகம்

கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய கருவி

(UTV | கொழும்பு) – சுவாச பரிசோதனை மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய கருவி குறித்து மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து துபாய் சுகாதார ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

துபாய் சுகாதார ஆணையத்தின் நோயியல் மற்றும் மரபியல் துறை இயக்குனர் டாக்டர் ஹுசைன் அல் சம்த் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“.. துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணியும் முழுவீச்சில் விரைவாக நடந்து வருகிறது. மேலும் பரிசோதனைகள அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துபாய் நகரில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பலரும் கொரோனா பரிசோதனையை தினமும் அதிக அளவில் செய்கின்றனர். ஆனால் அதற்கான முடிவுகள் வருவதற்கு அவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

எனவே இந்த பரிசோதனை முறைகளை விரைவுபடுத்த எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் மற்றும் புதிய ஆய்வுகளின் மூலம், தற்போது புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பதை சுவாச பரிசோதனையின் மூலம் ஒரு நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியும்.

இந்த கருவி தொடர்பான ஆய்வுகளை, முகம்மது பின் ராஷித் மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பிரெத்தோனிக்ஸ் என்ற நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து துபாய் சுகாதார ஆணையம் செய்து வருகிறது.

இந்த பரிசோதனையானது நாத் அல் ஹமர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், முதற்கட்டமாக 2 ஆயிரத்து 500 பேருக்கு சோதனை முறையில் செய்யப்பட்டது.

சிங்கப்பூர் நகரில் 180 நோயாளிகளுக்கு சோதனை அடிப்படையில், இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பது 93 சதவீதம் சரியாக உள்ளது என உறுதி செய்யப்படுள்ளது.

இந்த பரிசோதனையானது 100 சதவீதம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் அமலுக்கு வரும். இந்த பரிசோதனை மூலம் கொரோனா சோதனை முடிவுகள் ஒரு நிமிடத்தில் தெரியவரும் என்பதால் கொரோனா பரிசோதனை முடிவுகள் விரைவில் கிடைக்கும். மேலும் பரிசோதனைக்கூடங்களுக்கு ஏற்பட்டுள்ள வேலைப்பளுவானது பகுதியாக குறையும்..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

சீன ஆய்வுக் கப்பலுக்கு மாலைதீவு அனுமதி!

ஜனாதிபதியின் கொலையை தொடரும் பதற்றமும்

நாட்டிலிருந்து வெளியேறுவதற்கும் பிரான்ஸ் தடை