கேளிக்கை

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் SP காலமானார்

(UTV | கொழும்பு) – தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இன்று காலமானார்.

தமிழ்த் திரையுலகில் பல வெற்றி படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் தனது 61வது வயதில் காலமானார்.

எஸ் பி ஜனநாதன் இயக்கிய முதல் திரைப்படமான இயற்கை என்ற திரைப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இயற்கை, ஈ, பேராண்மை,புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற படங்களை இயக்கிய இவர் இறுதியாக விஜய் சேதுபதியை வைத்து லாபம் என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தை வெளியிடுவதற்கான இறுதி கட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

Related posts

விஜய் பட வாய்ப்பை மறுத்துவிட்டு ஜோதிகா எடுத்த திடீர் முடிவு!!!

நடிகைகளில் ஸ்ருதி ஹாசன் முதலிடம்

கார்த்தியின் ‘கைதி’ ஜப்பானிய மொழியில்