விளையாட்டு

இங்கிலாந்திடம் இந்தியா வீழ்ந்தது

(UTV | இந்தியா) – இந்திய அணியுடனான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுக்களினால் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.

இந்தியாவின் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி, இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் Shreyas Iyer 67 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றுக்கொடுத்ததுடன், இங்கிலாந்து அணி சார்பில் Jofra Archer 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த நிலையில், 125 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 தசம் 3 ஓவர்கள் நிறைவில், இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

இதேவேளை, இந்த போட்டியில் ஆட்டநாயகனாக Jofra Archer தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பங்களாதேஷை வீழ்த்திய தென்னாபிரிக்கா

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

ஸ்டீவ் ஸ்மித்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சி?