(UTV | கொழும்பு) – கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பின்னர், குருதி உறைதல் ஏற்பட்ட 30 பேர் நாட்டில் இதுவரையில் பதிவாகி இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் செயலாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்திருந்தார்.
தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்படும் சிக்கல் நிலைமைகள் குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் பதிவான குறித்த எண்ணிக்கையானது, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்தளவானது எனக் குறிப்பிடலாம் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.