விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணிக்கு புதிய தலைமை

(UTV |  ஆன்டிகுவா) – மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் ஜாசன் ஹோல்டர் இருந்து வந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக அவர் விலகியதால் புதிய தலைவராக கிரேக் பிராத்வெய்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக ஜாசன் ஹோல்டர் 2015-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். அவரது தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி 37 டெஸ்ட் போட்டியில் ஆடி 11 வெற்றி, 5 டிரா, 21 தோல்வி கண்டது. கடந்த மாதம் நடந்த பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக ஜாசன் ஹோல்டர் விலகினார். இதனால் அந்த தொடருக்கு தொடக்க ஆட்டக்காரர் கிரேக் பிராத்வெய்ட் தலைவராக செயல்பட்டார். அவரது தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் புதிய தலைவராக 28 வயதான கிரேக் பிராத்வெய்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 21ம் திகதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் தலைமை பொறுப்பை ஏற்ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிராத்வெய்ட் இதுவரை 66 டெஸ்ட் போட்டியில் விளையாடி 8 சதம் உள்பட 3,876 ஓட்டங்களையும் 10 ஒருநாள் போட்டிகளில் 278 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

Related posts

சனத் இனது தடைக்காலம் நிறைவுக்கு

நான் மனிதனாக மாறியதற்கு காரணம் அவரே

நுவன் சொய்சாவிற்கு ஐசிசி இனால்6 வருட கால தடை