உள்நாடு

இலங்கை தேசிய கொடி விவகாரத்தில் சீனா

(UTV | கொழும்பு) – இலங்கை தேசிய கொடி அச்சிடப்பட்ட பாதணி மற்றும் கால்துடைப்பான் விரிப்புகள் அமேசன் ஒன்லைன் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் சீனாவின் பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தை அணுகியுள்ளது.

சீனாவை தளமாகக் கொண்ட, வீட்டு வாசல்களின் கால்துடைப்பம் உற்பத்தியாளரை தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் இலங்கை தூதரகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசியக் கொடியை வீட்டு கால்துடைப்பமாக விளம்பரம் செய்வது குறித்து வெளியுறவு செயலாளர் இலங்கையில் உள்ள சீன தூதரகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் வோஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கை தூதரகத்திற்கும் அமேசனுடன் இந்த விஷயத்தைப் பின்தொடருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சீனாவில் இருக்கும் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளரை உடன் தொடர்பு கொள்ளுமாறு பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்திருந்தார்.

அத்துடன், கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கும் அறிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சீன தூதரகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

“தேசிய கொடிகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். இதே போன்ற தயாரிப்புகளை அமேசானில் பல்வேறு நாடுகளின் விற்பனையாளர்கள் விற்கிறார்கள்.

எவ்வாறாயினும், பல தசாப்தங்களாக இலங்கையின் அமைதி, செழிப்பு மற்றும் கௌரவத்திற்காக சீனா ஆதரவளித்து வருகின்றது என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

மெனிங் சந்தை இன்று மீண்டும் திறப்பு

கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது

பட்டதாரிகளுக்கான அறிவித்தல்